கமல்ஹாசனின் ‘தமிழ் பிச்சை எடுக்க உதவாது’ உரைக்கு நிர்மலா சீதாராமன் பதில் என்ன?

Share

கமல் ஹாசன், நிர்மலா சீதாராமன், பெரியார்

பட மூலாதாரம், SANSAD TV

மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்.பியுமான கமல்ஹாசன் புதன்கிழமை மாநிலங்களவையில் தனது முதல் உரையை வழங்கினார். அப்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை மறைமுகமாகக் குறிப்பிட்டு ‘தமிழன் பிச்சை எடுக்க மாட்டான்’ எனப் பேசினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக நிர்மலா சீதாராமன் அலுவலகமும் ஒரு பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஷார்ட் வீடியோ

காணொளிக் குறிப்பு,

கமல் பேசியது என்ன?

மாநிலங்களவையில் முதலில் ஆங்கிலத்தில் பேசிய கமல்ஹாசன், தனக்குத் தமிழை அறிமுகப்படுத்திய ஆசிரியர்களில் ஒருவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை என்று குறிப்பிட்டார்.

“எங்கள் மொழிக்கு எதிரான எந்த விதமான ஆக்கிரமிப்புகள் நடந்தாலும் அதை நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ள அவர் (அண்ணா) எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்” எனக் கூறினார்.

அதன் பிறகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மறைமுகமாகக் குறிப்பிட்டு தமிழில் பேசத் தொடங்கினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com