ராஜஸ்தானில் பதற்றம்: தலையை வெட்டி இளைஞர் கொலை, வீடியோ பதிவு செய்து மிரட்டல்

Share

  • மோஹர் சிங் மீனா
  • பிபிசி ஹிந்தி

உதய்பூர் கொல

பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC

படக்குறிப்பு,

உதய்பூரின் தான்மண்டி காவல் நிலையப் பகுதியில் கன்ஹையா லால் தேலி, தையல் கடை நடத்தி வந்தார். செவ்வாய்கிழமை மதியம், துணி தைக்க வந்திருப்பதாகக் கூறி அவரது கடைக்கு வந்தவர்கள், அவரை கடையிலிருந்து வெளியே இழுத்து வந்து வாளால் கழுத்தை அறுத்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில், செவ்வாய்கிழமை மாலை 3.30 மணியளவில் ஒருவர் வாளால் தலை துண்டித்து கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து உதய்பூரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அப்பகுதியில் அமைதியையும், ஒழுங்கையும் நிலைநாட்ட போலீசார் முயற்சித்து வருகின்றனர்.

“இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேர் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள பீமில் இருந்து பிடிக்கப்பட்டுள்ளனர்” என்று காவல்துறை டி.ஜி. எம்.எல்.லாதர் கூறினார்.

உதய்பூர் ஆட்சித்தலைவர் தாரா சந்த் மீனா மற்றும் எஸ்பி மனோஜ் குமார் மற்றும் 12 காவல் நிலையங்களின் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com