வெளிநாட்டு ஆண்களை ஏமாற்றி ரஷ்யாவுக்காக போரிடச் செய்யும் இந்த பெண் யார்?

Share

ரஷ்யா, யுக்ரேன், ரஷ்யா-யுக்ரேன் போர், போலினா அசார்னிக், ரஷ்ய பயண ஆவணங்கள்

பட மூலாதாரம், Telegram

படக்குறிப்பு, உமர் பயணம் செய்த சிரிய குழு உட்பட, புதிதாக சேர்க்கப்பட்டவர்களுடன் தான் இருக்கும் புகைப்படங்களை அசார்னிக் அடிக்கடி வெளியிடுகிறார்

ஓமரின் பாஸ்போர்ட்டின் முனைகளில் தீ படர்வதையும், “இது நன்றாக எரிகிறது,” என்று ஒரு பெண் ரஷ்ய மொழியில் கூறுவதையும் அந்த வீடியோவில் கேட்க முடிகிறது.

சிரியாவை சேர்ந்த 26 வயதான ஓமர் ஒரு கட்டுமானத் தொழிலாளி. யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் முன்களத்தில் சுமார் ஒன்பது மாதங்களாக பணியில் இருந்தபோது தான் இந்த வீடியோ அவரது கைபேசிக்கு வந்தது.

அந்தப் பெண்ணின் குரல் அவருக்கு பரிச்சயமானதாக இருந்தது. அவர்தான் பொலினா அலெக்ஸாண்ட்ரோவ்னா அசார்னிக், அதிக ஊதியம் தரும் வேலை மற்றும் ரஷ்ய குடியுரிமை தருவதாக வாக்களித்து, ரஷ்யாவிற்காகப் போரிட தன்னை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தவர் என்று ஓமர் கூறுகிறார். ஆனால் இப்போது அவர் கோபமாக இருக்கிறார்.

யுக்ரேனிலிருந்து அனுப்பும் தொடர்ச்சியான குரல் பதிவுகளில் புனைப்பெயரில் பேசுகிறார் (பாதுகாப்பிற்காக). தான் எப்படி அந்தப் போர் மண்டலத்திற்குள் சிக்கினார் என்பதையும், அங்கு தான் அச்சத்தில் தவிப்பதையும் அவர் விவரிக்கிறார்.

3,000 டாலர் பணம் கொடுத்தால், போர் நடவடிக்கைகளில் ஈடுபடாத ஒரு பணியை உறுதி செய்வதாக அசார்னிக் தன்னிடம் வாக்களித்ததாக விவரிக்கும் ஓமர், வெறும் 10 நாட்கள் பயிற்சிக்குப் பிறகு தான் போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டதாக கூறுகிறார். தான் பணம் கொடுக்க மறுத்தபோது, தனது பாஸ்போர்ட்டை அசார்னிக் எரித்துவிட்டதாகக் கூறுகிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com