இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் பற்றி அமெரிக்காவின் அதிருப்தி என்ன?

Share

இந்தியா மீதான 'அழுத்தத்தை அதிகரிக்க', அமெரிக்கா 25 சதவீத கூடுதல் வரியை விதித்ததாகவும், ஆனால் ஐரோப்பா அவ்வாறு செய்யவில்லை என்றும் பெசென்ட் கூறினார்.

பட மூலாதாரம், Press Information Bureau (PIB)/Anadolu via Getty Images

இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா எதிர்வினையாற்றியுள்ளது.

இந்தியாவும் ஐரோப்பாவும் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ என்று அழைக்கின்றன.

ஆனால் அமெரிக்க கருவூலத்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் இந்த ஒப்பந்தத்தை விமர்சித்துள்ளார்.

சிஎன்பிசி செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், “அவர்கள் தங்களுக்கு எது சிறந்ததோ அதைச் செய்யட்டும். ஆனால் ஐரோப்பாவின் இந்த அணுகுமுறை எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது,” என்று கூறினார்.

“யுக்ரேன் – ரஷ்யா போரினால் பாதிக்கப்பட்டவர்களின் வரிசையில் இவர்கள்தான் முன்னணியில் இருக்கிறார்கள். இந்தியா முதலில் தடை செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெயை தள்ளுபடி விலையில் கிடைத்ததால் வாங்கத் தொடங்கியது. பின்னர், ஐரோப்பா அதே சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை இந்தியாவிடமிருந்து வாங்கத் தொடங்கியது. இதன் பொருள் அவர்கள் தங்களுக்கு எதிரான போருக்கு அவர்களே நிதியளிக்கிறார்கள் என்பதுதான்,” என்று ஸ்காட் பெசென்ட் குறிப்பிட்டார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com