டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தின் முடிவுக்காக காத்திருக்கும் ஐ.சி.சி – இந்தியாவில் விளையாட மறுத்தால் என்ன நடக்கும்?

Share

வங்கதேச கோரிக்கைக்கு ஐசிசி பதில்: டி20 உலகக் கோப்பை போட்டிகள் திட்டமிட்ட இடத்திலேயே நடைபெறும்

பட மூலாதாரம், Getty Images

வங்கதேச கிரிக்கெட் வாரியம், டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே நடத்த வேண்டும் என்று விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்திருக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), போட்டிகள் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட இடங்களிலேயே நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையிலான தற்போதைய பதற்ற நிலையைக் காரணமாகக் கொண்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக தங்களின் அணி பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று ஐசிசியிடம் வங்கதேசம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த கோரிக்கைக்குப் பிறகு, தேவையான அனைத்து பாதுகாப்பு மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும், இவ்வளவு குறுகிய காலத்தில் போட்டிகளை மாற்றுவது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்ததாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சிக்கலைத் தீர்க்க ஐசிசி நிர்வாகம் வங்கதேச கிரிக்கெட் வாரியத்துடன் பல்வேறு விவாதங்கள் மற்றும் கூட்டங்களை நடத்தியதாகவும், மத்திய மற்றும் மாநில காவல் துறைகளின் ஆதரவு உள்ளிட்ட விரிவான பாதுகாப்புத் திட்ட விவரங்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டதாகவும் ஐசிசி கூறியுள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 7 முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com