பாரதியார் வரிகள் இடம்பெற்ற 10 தமிழ் திரைப்பட பாடல்கள் எவை?

Share

சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி படத்தில் கூட  இடம்பெற்ற பாரதியார் வரிகள் எவை தெரியுமா?

    • எழுதியவர், அம்ரிதா பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழ்

இன்று (டிசம்பர் 11) மகாகவி, தேசியகவி என்றெல்லாம் அழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதியார் பிறந்த தினம். தேச பக்தி, பெண்ணுரிமை, சமூக சீர்திருத்தம் போன்ற முக்கிய தலைப்புகளின் கீழ் அவர் எழுதிய பல பாடல்கள் திரைப்படங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறு திரை இசைப் பாடல்களாக பிரபலமான பாரதியாரின் 10 பாடல்வரிகள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

1. சுட்டும் விழி சுடர் தான் கண்ணம்மா

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் வரிகள் பாரதியாரின் ‘கண்ணம்மா – என் காதலி’ என்ற பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது. இது கண்ணன் பாட்டு தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த இந்தப் படத்தில் வலுவான பின்னணி இசை எதுவும் இல்லாமல், வெறும் சுருதியுடன் ஒலிக்கும் இப்பாடலை ஹரிஹரன் பாடியிருப்பார்.

இப்படத்தில் ஐஷ்வர்யா ராய் நடித்த கதாபாத்திரமான மீனு, ஒரு தீவிர பாரதியார் ரசிகராகக் காட்டப்படுவார். தனது காதலன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கொட்டும் மழையில் நின்று அவரது சகோதரியிடம் விவரித்துக் கொண்டிருப்பார்.

அப்போது இந்தப் பாடலை பாடியபடி அப்பாஸ் கதாப்பாத்திரம் மீனுவை நோக்கி வருவது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்தக் காட்சியே இருவருக்கும் இடையேயான குறுகியகால காதல் கதையின் தொடக்கமாக இருக்கும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com