குழந்தை பெற்றுக்கொள்வது பெண்களின் ஆயுளை பாதிக்கிறதா? புதிய ஆய்வில் தகவல்

Share

குழந்தைகள், பெண்கள், வாழ்க்கை, வரலாறு, குழந்தைப் பிறப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சில பெண்கள் தாங்கள் ஒவ்வொரு குழந்தையைப் பெற்றெடுத்தபோதும், தங்கள் மொத்த ஆயுளில் ஆறு மாதங்களை இழந்ததாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன

    • எழுதியவர், கேட்டி பௌவி
    • பதவி, பிபிசி உலக சேவை

குழந்தைகள் கோபப்படும்போது, ​​இரவு உணவை நிராகரிக்கும்போது அல்லது தூங்க மறுக்கும்போது, “தங்கள் ஆயுளில் பல வருடங்களை குழந்தைகளே எடுத்துக் கொள்கிறார்கள்” என்று தாய்மார்கள் நகைச்சுவையாகச் சொல்வதைக் கேட்டிருப்போம்.

ஆனால், கடினமான சூழ்நிலையில் வாழும் பெண்களுக்கு அது வெறும் நகைச்சுவைப் பேச்சல்ல, ஓரளவு உண்மைக்கு நெருக்கமானதாகவே இருக்கலாம் என்று புதிய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

வரலாற்றுப் பதிவுகளில் மேற்கொண்ட ஆய்வின்படி, சில தாய்மார்களின் ஆயுள், அவர்கள் பெற்ற ஒவ்வொரு குழந்தைக்கும் ஆறு மாதங்கள் வரை குறைந்திருக்கலாம். மிகவும் கடினமான சூழலில் வாழ்ந்த பெண்கள் இந்த இணைப்பின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கடந்த 1866 மற்றும் 1868க்கு இடையில் ஏற்பட்ட ‘பெரும் பின்லாந்து பஞ்சத்தின்’ போது வாழ்ந்த 4,684 பெண்களின் பிறப்பு மற்றும் இறப்பு விவரங்களைக் கொண்ட திருச்சபையின் பதிவுகளை பரிணாம ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

இது “சமீபத்திய ஐரோப்பிய வரலாற்றில் மிகவும் கொடூரமான பஞ்சங்களில் ஒன்று” என விளக்குகிறார் ஆய்வின் முதன்மை ஆராய்ச்சியாளரும் நெதர்லாந்தின் க்ரோனிங்கன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவருமான முனைவர் யுவான் யங்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com