“நான் அமைச்சர் பதவியை ஒருநாளும் தவறாகப் பயன்படுத்தவில்லை!” – சுரேஷ் கோபி |” I didn’t used my posistion in wrong ways!” – Suresh Gopi

Share

‘அப்போதெகரி’ படம் விருதுகளுக்குப் போய்ச் சேரவில்லை. சொல்லப்போனால், கேரள மாநிலத்தைத் தாண்டி அந்தப் படம் எவருக்கும் சென்று சேரவில்லை. எந்தக் கமிட்டி உறுப்பினர்கள் தடுத்தார்கள் என்பது எனக்குத் தெரியும்.

நான் அமைச்சர் பதவியை ஒருநாளும் தவறாகப் பயன்படுத்தவில்லை. ‘படத்தைத் திரையிடுங்கள்’ என ஒரு நடிகனாக மட்டுமே கேட்டேன்.

ஆனால் நான் மத்திய அமைச்சராக இருந்ததால், அந்தக் கோரிக்கை கூட நிராகரிக்கப்பட்டது.

இதைத் தாண்டி என்னுடைய இன்னும் சில படங்களும் என் அரசியல் நிலைப்பாட்டால் பாதிக்கப்பட்டன.

சுரேஷ் கோபி

சுரேஷ் கோபி

பாவம் பிஜு மேனன் ‘கருடன்’ படத்திற்காக சிறந்த நடிகர் விருது பெற்றிருக்கலாம். அவருக்கும் கிடைக்கவில்லை. இந்த விஷயங்கள் எனக்கு வலியை ஏற்படுத்துகின்றன.

நான் ஒருநாளும் பத்ம விருதுக்கு விண்ணப்பித்ததில்லை. பலர் விண்ணப்பிப்பதைப் பார்த்திருக்கிறேன். அதனை நான் செய்ய மாட்டேன். தேசிய விருதுகள் தாமாகவே வர வேண்டும்.

என்னை மூவர்ணக் கொடியால் சுற்றி, இந்தியா சார்பில் துப்பாக்கி ஏந்திய மரியாதை கொடுத்தால் போதும். இருந்தாலும், ஒருவேளை அப்படியொரு கெளரவம் கிடைத்தால் அதை மரியாதையோடு ஏற்றுக்கொள்வேன்.” எனக் கூறியிருக்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com