பிகாரை அடுத்து மேற்கு வங்கத்தை குறிவைக்கும் பாஜக – மமதா பானர்ஜி கோட்டையை உடைக்க முடியுமா?

Share

மமதா பானர்ஜி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொல்கத்தாவில் எஸ்ஐஆர்-க்கு எதிரான பேரணியில் மமதா பானர்ஜி பங்கேற்றார்

நவம்பர் 14 அன்று பிகார் சட்டமன்றத் தேர்தலின் ஆரம்பக்கட்ட முடிவுகள் வெளியானபோது, தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்தது.

இதனிடையே இரவு 12:05 மணியளவில், மேற்கு வங்க பாஜக தனது எக்ஸ் பக்கத்தில், “அடுத்ததாக மேற்கு வங்கம்” எனப் பதிவிட்டிருந்தது.

பிகார் தேர்தல் முடிவுகள் தெளிவாக வெளியான பிறகு, பிரதமர் நரேந்திர மோதி கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றினார்.

அப்போது, “கங்கை நதி பிகாரில் இருந்து வங்கம் வரை பாய்கிறது. வங்கத்தில் பாஜகவின் வெற்றிக்கு பிகார் பாதை அமைத்துள்ளது. மேற்கு வங்கத்தில் நடக்கும் காட்டாட்சியை அழித்தொழிக்க உங்களுடன் பாஜக இணைந்து வேலை செய்யும் என்று என் சகோதர, சகோதரிகளுக்கு உறுதி கூறுகிறேன்” என்றார்.

அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால், மோதியின் இந்தக் கருத்துகள் அரசியல் ரீதியாக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதனால்தான், பிகார் தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே மேற்கு வங்கம் குறித்த விவாதங்கள் ஆரம்பித்துள்ளன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com