Tamil News Live | இன்றைய (ஜனவரி 11) டாப்10 செய்திகள் – News18 Tamil

Share

இன்றைய டாப்10 செய்திகள்

1) ஜனவரி 17-ம் தேதி அரசு விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. அதற்கு பதிலாக வரும் 29-ம் தேதி பணி நாளாக இருக்கும் என அறிவிப்பு. 

2) மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16-ம் தேதிக்கு பதில் ஜனவரி 17-ம் தேதிக்கு மாற்றம். வரும் 16-ம் தேதி முழுஊரடங்கு என்பதால் ஜல்லிக்கட்டு தேதி மாற்றம்.


3) ஜல்லிக்கட்டுக்கான ஆன்லைன் முன்பதிவு இரண்டரை மணி தாமதமாக தொடக்கம். 

4) மதுரையில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்திற்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்.

5) பொங்கல் தொகுப்பில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. ஒபிஎஸ் – இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு உணவுத்துறை அமைச்சர் விளக்கம்

6) பொங்கலுக்கு பின் முழுஊரடங்கு தொடர வாய்ப்பில்லை – அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவிப்பு

7) பொங்கல் முடிந்து சொந்த ஊர் திரும்புவர்களுக்கு 17-ம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு. 16-ம் தேதி முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பி அளிக்கப்படும்.

8) பல்வேறு மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.40 கோடி மதிப்பிலான 11 உலோக சிலைகள் சென்னையில் மீட்பு. 

9) உ.பி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள அமைச்சர் ராஜினாமா. பட்டியலின மக்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு. 

10) தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க முடியாமல் திணறல்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com