“அவளுக்கு பிடித்த பாடலை இசைத்துக்கொண்டிருந்தேன்” – மனைவியை கொலை செய்தவரின் அதிர்ச்சி வாக்குமூலம் | Man Kills Wife, Holds Hand And Plays Her Favorite Song After

Share

லண்டனில் சார்ட்டர் பாயின்ட் குடியிருப்பில் சிச்சென் யாங் (21) என்பவர் தன் மனைவி Nhu Quynh Pham-வுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த செவ்வாயன்று சிச்சென் யாங் தன் மனைவியைக் கொலை செய்துவிட்டதாக Altamonte Springs காவல்நிலையத்துக்குத் தகவல் கிடைத்துள்ளது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை விசாரித்ததில் சிச்சென் யாங் தன் மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, காவல்துறையின் பரிசோதனையில், சிச்சென் யாங் -கின் மனைவி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், குளியல் தொட்டியில் மூழ்கவைக்கப்பட்டு இறந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிச்சென் யாங் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், “என் மனைவி வெளியில் சொல்ல முடியாத குற்றத்தைச் செய்துவிட்டார். அதனால் கழுத்தறுத்து கொலை செய்ய முயன்றேன். ஆனால் அவள் ரத்த வெள்ளத்தில் ஊர்ந்து செல்ல முயற்சி செய்தாள். அதனால் அவளைத் தண்ணீர் தொட்டியில் மூழ்கவைத்து கொலை செய்துவிட்டேன்.

காவல்துறை

காவல்துறை

ஆனால், அவள் இறக்கும் போது அவளுக்காக அவளுக்குப் பிடித்த பாடலை, அவள் கைகளைப் பிடித்துக்கொண்டே இசைத்துக்கொண்டிருந்தேன். அவள் மெதுவாக இறந்துபோனாள்” எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறை தரப்பு, “சிச்சென் யாங் வேலை செய்துக்கொண்ருக்கும் நிறுவனத்தில் முதலாளி அவர் வேலைக்கு வராததால் தொலைப்பேசியில் அழைத்துள்ளார்.

அதற்குப் பதிலளிக்காத போது நேரில் வந்து பார்த்துள்ளார். அதன் பின்பே காவல்துறைக்குத் தகவல் அளித்தார். சிச்சென் யாங்-மனைவி அவருடைய பாஸ்போர்டை எரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் மீது சிச்சென் யாங் கோபமாக இருந்ததாகத் தெரிகிறது. மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” எனக் கூறியுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com