மழைக்காலத்தில் என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்; எவற்றை தவிர்க்க வேண்டும்? | What foods can be eaten during the rainy season; which ones should be avoided?

Share

தயிர், மந்தமான உணவுகள், கிழங்கு வகைகள், காராமணி, மொச்சை, கீரை வகைகள், மா,பலா, வாழை, தர்பூசணி, முலாம்பழம், சீதாப்பழம், வெண்பூசணி, புடலங்காய், காலிஃப்ளவர், கோஸ், காளான், மீன் மற்றும் கடல் உணவுகள் போன்றவற்றை நீக்க வேண்டும். பச்சையான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

குளிர்பானங்கள், பழைய, மீந்து போன, ஆறிப்போன உணவுகள், குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உணவுகள், துரித உணவுகள், வறுத்த உணவுகள், சுகாதாரமற்ற முறையில் தயாரித்த உணவுகள் தவிர்க்கவும்.

காலையில் சுக்கு மல்லி காபி, ஆவியில் வேகவைத்த சிற்றுண்டி, பகலில் சம்பா அரிசி சாதம், இளம் பச்சை காய்கறியில் செய்த பொரியல், கூட்டு, தாளிதம் செய்த மோர், மிளகு ரசம், முட்டையின் வெண்கரு, வெள்ளாடு, காடை, கருங்கோழி போன்ற மாமிசங்கள், முளைக்கட்டிய தானியங்கள், சூப் வகைகள், இரவில் தெவிட்டாத தேன் அல்லது மஞ்சள் கலந்த பால் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

மேற்கூறிய உணவு முறைகளை சரிவர கடை பிடித்தால் வாந்தி, காமாலை, அஜீரணம், டைபாய்டு, மலேரியா, சளி, காய்ச்சல், நுரையீரல் நோய்கள் போன்ற மழைக்கால நோய்கள் வராமல் தடுத்துக் கொள்ளலாம்’’ என்கிறார் மருத்துவர் ஆ.சங்கீதா.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com