இந்தக் காலத்தில் இரண்டு, மூன்று கடன்களை வாங்கி… இதுபோக கிரெடிட் கார்டு வாங்கி சிக்கித் திண்டாடிக் கொண்டு இருக்கும் நபர்கள் பல.
அப்படியான நபரா நீங்கள்…? அந்தக் கடன்களை அடைத்துவிட்டு, ஹாயாக நீங்கள் இருப்பதற்கான டெக்னிக்குகள் இதோ…
1. டெப்ட் ஸ்நோ பால்:
நீங்கள் வைத்திருக்கும் கடன்கள் அனைத்திருக்கும் சிறிய பேமென்டுகளை செய்துவிட்டு, எது இருப்பதிலேயே சிறிய கடனோ, அதை முழுமையாக அடையுங்கள்.
இதை தொடர்ந்து செய்துவந்தால், சீக்கிரம் கடன்கள் காலி ஆகிவிடும்.
2. டெப்ட் அவலான்சி:
எந்தக் கடனுக்கு அதிக வட்டி இருக்கிறதோ, அதை முதலில் கட்டி முடியுங்கள்.
அதன் பின், அதற்கு சென்றுகொண்டிருந்த தொகையை, வேறொரு கடனை அடைக்கப் பயன்படுத்துங்கள்.
இதை திரும்ப திரும்ப செய்யும்போது, சீக்கிரம் அனைத்து கடன்களையும் அடைத்து முடித்துவிடுங்கள்.
3. மாதத் தவணையை அதிகரியுங்கள்!
வருமானம் அதிகரித்தாலோ, வேலையில் இன்கிரிமென்ட் கிடைத்தாலோ, கடன்களுக்கான மாதத் தவணையை சற்று அதிகரித்துக் கட்டுங்கள்.
இது உங்களுடைய கடனை அடைக்க உதவுவதோடு, சீக்கிரமும் கடனை அடைத்து முடித்துவிடலாம்.