கேரளாவில் முதல் முறையாக கிருஷ்ணர் வேடமிட்டு கதகளி அரங்கேற்றம் செய்த இஸ்லாமிய பெண்

Share

கேரளாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி சப்ரி

பட மூலாதாரம், Nizam Ammas

படக்குறிப்பு, கேரளாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி சப்ரி

    • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்

”இன்று என் கனவு நனவாகியிருக்கிறது. அரங்கேற்றத்தின்போது எனக்கு எவ்வித அச்சமும் ஏற்படவில்லை. மாறாக நான் பெருமகிழ்ச்சியில் இருக்கிறேன். அதை என்னால் விவரிக்க இயலாது. ஆனால் இன்னும் நான் கற்கவேண்டியது நிறைய இருக்கிறது. கதகளி கலையில் ஒரு முக்கியக் கலைஞராக உருவெடுக்க வேண்டும். அதற்காக நான் இன்னும் நிறைய கற்கவும் தயாராயிருக்கிறேன்!”

கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள 95 ஆண்டு பழமையான கலா மண்டலத்தில் அக்டோபர் 2-ஆம் தேதியன்று விஜயதசமி நாளில் நடந்த கதகளி அரங்கேற்றத்தில் கிருஷ்ண வேஷத்தில் பங்கேற்ற இஸ்லாமிய சிறுமி சப்ரி, பிபிசியிடம் கூறிய வார்த்தைகள் இவை.

ஷார்ட் வீடியோ

காணொளிக் குறிப்பு, கிருஷ்ணர் வேடமிட்டு கதகளி அரங்கேற்றம் செய்த இஸ்லாமிய மாணவி

கேரள மாநிலத்தின் பாரம்பரியக் கலையான கதகளியை கற்றுக்கொண்டு அரங்கேற்றம் செய்துள்ள முதல் இஸ்லாமியச் சிறுமியாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளார் சப்ரி.

அதேநேரத்தில் இதற்கு சில பகுதிகளிலிருந்து விமர்சனங்களும் வந்திருப்பதாகக் கூறும் சப்ரியின் தந்தை நிஜாம் அம்மாஸ், அவற்றைப் பொருட்படுத்தாமல் கடந்து செல்ல விரும்புவதாகக் கூறுகிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com