பட மூலாதாரம், Getty Images
(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)
ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நல்ல தொடக்கத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் அணி 33 ரன்களுக்குள் ஒன்பது விக்கெட்டுகளை இழந்தது.
இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், பும்ரா, அக்சர் மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சாஹிப்சாதா ஃபர்ஹான் 57 ரன்கள் எடுத்தார்.
தடுமாறிய பாகிஸ்தான்
பட மூலாதாரம், Getty Images
டாஸ் வென்ற இந்தியா முதலில் பாகிஸ்தானை பேட் செய்ய சொன்னது. ஃபகர் ஜமான், சாஹிப்சாதா ஃபர்ஹான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
முதல் ஓவரில் சிவம் தூபே பந்து வீசினார். முதல் 4 பந்துகளில் ரன் ஏதும் அடிக்காமல் இருந்த பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான், 5வது பந்தில் பவுண்டரியுடன் ஆட்டத்தை தொடங்கினார்.
2வது ஓவரை வீச பும்ரா களத்திற்கு வந்தார். அவரது ஓவரில் ஒரு பவுண்டரி, 2 ரன்கள் மற்றும் L1 என 7 ரன்களை சேர்த்தது பாகிஸ்தான் அணி.
2 ஓவர் முடிவில் 11-0 என்ற நிலையில் பாகிஸ்தான் விளையாடி வந்தது.
பின் நிதானமாக விளையாடிய ஃபகர் ஜமான், சாஹிப்சாதா தங்களின் பாட்னர்ஷிப்பில் 7 ஓவர் முடிவில் 56 ரன்களை சேர்த்தனர்.
இருவரும் இணைந்து 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசியிருந்தனர்.
9 ஓவர் வரை விக்கெட்டை இழக்காமல் ஆடி வந்த பாகிஸ்தான், அந்த ஓவரின் 4வது பந்தில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.
38 பந்துகளில் 57 ரன்களை விளாசி ஃபர்ஹான் ஆட்டமிழந்தார். அவருக்கு பதிலாக சைம் ஆயுப் களமிறங்கியுள்ளார்.
அதன்பிறகு 12.5வது ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் சைம் ஆயுப். குல்தீப் யாதவ் இவரின் விக்கெட்டை தூக்கினார்.
அதன்பின் ஐந்து பந்துகளுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்துவிட்டது பாகிஸ்தான்.
இதுதான் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை நிதானமாக ரன்களை சேர்த்து வந்த பாகிஸ்தான் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தொடங்கியதால் போட்டி இந்தியாவுக்கு சாதகமாக திரும்பியது.
13.3 ஓவரில் முகமது ஹரிஸின் விக்கெட்டை வீழ்த்தினார் அக்ஸர் படேல். மூன்று விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தது பாகிஸ்தான்.
14வது ஓவரின் 4வது பந்தில், அக்சர் படேல் முகமது ஹாரிஸை டக் அவுட்டாக்கி பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார்.
15 ஓவர் முடிவில், 4 விக்கெட்கள் இழப்பிற்கு 128 ரன்களை எடுத்திருந்தது பாகிஸ்தான்.
பட மூலாதாரம், Getty Images
அதற்கடுத்த 3வது பந்திலேயே ஹூசைன் தலாத் விக்கெட்டை பறித்தார் அக்ஸர் படேல்.
பின் மீண்டும் 16வது ஓவரை வீச வந்த குல்தீப் யாதவ் முதல் பந்திலேயே கேப்டன் சல்மான் ஆகாவை அவுட்டாக்கினார். 8 ரன்கள் மட்டுமே சேர்த்த சல்மான் பெவிலியன் திரும்பினார்.
அதன்பிறகு பாட்னர்ஷிப் சரியாக அமையாததால் பாகிஸ்தான் அணி ரன்களை சேர்க்க சற்று சிரமப்பட்டது.
தொடர்ந்து 16.4வது ஓவரிலேயே மற்றொரு விக்கெட்டை வீழ்த்தினார் குல்தீப் யாதவ். இது ஷாஹீன் அஃப்ரிடியின் விக்கெட் ஆகும். LBW முறையில் அவரை டக் அவுட் ஆக்கி திருப்பி அனுப்பினார்.
பின் ஒரே ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டாக ஃபஹீம் அஷ்ரவை அவுட்டாக்கினார் குல்தீப் யாதவ்.
இந்த நிலையில் 17 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் சேர்த்திருந்தது.
அதன்பின் 17வது ஓவரில் களமிறங்கிய பும்ரா தனது பங்கிற்கு ஹரிஸ் ரவுஃபின் விக்கெட்டை வீழ்த்தினார்.
19 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்த்து பாகிஸ்தான்.
பின் கடைசி ஓவரில் மீண்டும் பும்ரா களமிறங்கி முதல் பந்திலேயே நவாஸ் விக்கெடுட்டை வீழ்த்தி ஆட்டத்தை முடித்தார்.
அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4, பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அக்ஸர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இறுதிப் போட்டியின் சமீபத்திய நேரடி ஸ்கோரைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
பட மூலாதாரம், Getty Images
ஹர்திக் பாண்ட்யா இல்லை
டாஸ் பிறகு வென்ற பேசிய சூர்யகுமார் யாதவ், “நாங்கள் முதலில் பந்துவீச உள்ளோம். நாங்கள் முதலில் நன்றாகவே பேட்டிங் செய்து வருகிறோம். ஆனால் இன்று சேசிங் செய்ய விரும்புகிறோம். கடந்த 5-6 போட்டிகளில் நாங்கள் நன்றாகவே விளையாடியுள்ளோம்” என்றார்.
மேலும் இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக பங்கேற்கவில்லை என தெரிவித்தார்.
அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் கான் ஆகியோரும் இப்போட்டியில் இடம்பெறவில்லை.
பின் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா, “நாங்களும் முதலில் பேட் செய்ய வேண்டும் என்றுதான் விரும்பினோம்.” என்றார்.
மேலும், “இன்றைய போட்டிக்கு மிகவும் ஆர்வமாக உள்ளோம். இதுவரை சிறந்த போட்டியை நாங்கள் விளையாடவில்லை. ஆனால் இன்றைய போட்டி சிறப்பானதாக இருக்கும் என நம்புகிறோம்” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
அணி விவரம்
சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் தூபே, ரிங்கு சிங், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், பும்லா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பாகிஸ்தான் அணியில் ஷாஹிப்ஸாதா ஃபர்ஹான், ஃபகர் ஸமான், சைம் ஆயுப், சல்மான் ஆகா, ஹுசைன் தலாத், முகமது ஹரிஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரப், ஷஹீன் அஃப்ரிடி, ஹரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆசிய கோப்பை தொடர் வரலாற்றிலேயே இந்தியா, பாகிஸ்தான் அணிகள் முதல்முறையாக இறுதிப்போட்டியில் மோதவதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
ஆசிய கோப்பை 2025
இது 17வது சீசன் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகும். ஆசிய கோப்பை வரலாற்றில் இந்த முறை முதல்முறையாக எட்டு அணிகள் பங்கேற்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் யூஏஇ, ஓமன், ஹாங்காங் அணிகள் பங்கேற்றன.
அதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. அதில் இந்தியா, பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
பட மூலாதாரம், Getty Images
தோல்வியே காணாத இந்திய அணி
நடப்பு ஆசிய தொடரில் குரூப் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்றுகளில் விளையாடிய 6 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி வாகை சூடியுள்ளது. இதனால் சூர்ய குமார் தலைமையிலான இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக கருதப்படுகிறது.
நடப்பு தொடரின் லீக் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்றுகளில் இந்தியாவுடன் மட்டுமே பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. அதுதவிர போட்டியிட்ட ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம், இலங்கை என மற்ற அணிகளுடனான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
எத்தனை முறை சாம்பியன்?
பட மூலாதாரம், Getty Images
ஆசிய கோப்பை வரலாற்றில் இந்திய அணி இதுவரை 8 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
ஆசிய கோப்பை தொங்கப்பட்ட 1984ஆம் ஆண்டிலேயே சாம்பியனானது. அதன்பின் 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதில் 7 முறை ODI வடிவிலும் (Format) ஒருமுறை டி20 வடிவிலும் வென்றுள்ளது.
அதேசமயம் பாகிஸ்தானை பொறுத்தவரை 2000 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் 2 முறை கோப்பை வென்றுள்ளது. இருமுறையும் ODI வடிவாகும்.
இந்நிலையில் ஆசிய கோப்பை வரலாற்றிலேயே இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று முதல்முறையாக இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.