Ashes; matthew hayden; joe root; ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து ஆஷஸ் தொடருக்கு முன்பாக மேத்யூ ஹைடன் சவால்

Share

கிரிக்கெட் பரிணாம வளர்ச்சி டெஸ்ட் போட்டிகளில் ஆரம்பித்து 60 ஓவர் ஒருநாள் போட்டி, 50 ஓவர் ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி, 10 ஓவர் போட்டி, 100 பந்துகள் போட்டி என எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது.

ஆனாலும், டெஸ்ட் கிரிக்கெட்டின் லெகஸி காலப் போக்கில் கரைந்துவிடாமல், ரசிகர்கள் மத்தியில் இன்றும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய ஃபார்மெட்டாக உயர்ப்புடன் வைத்திருக்கும் முதன்மையான தொடர் ஆஷஸ்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கிடையே நூற்றாண்டைக் கடந்து நடந்து கொண்டிருக்கும் இந்த ஆஷஸ் தொடர் வரும் நவம்பர் 21 முதல் ஜனவரி 8 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கிறது.

கடைசியாக 2010-11ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை வென்ற இங்கிலாந்து அணி அதன்பிறகு ஒரு ஆஷஸ் தொடரைக்கூட வெல்லவில்லை.

மேலும், 2015-க்குப் பிறகு ஆஷஸ் தொடரையே இங்கிலாந்து வெல்லவில்லை. மறுபக்கம் 2017-18 முதல் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலியா வசம்தான் இருக்கிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com