டேன் டீ பெயரில் அரசு நடத்தும் இந்த ஷாப்புகளில் முன்னணி தனியார் நிறுவனங்களின் தேயிலை தூள்களே விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள காட்டேரி சந்திப்பு பகுதியில், டேன் டீ கடையில் முழுக்க முழுக்க தனியார் தேயிலை தூள்களை அடுக்கி விற்பனை செய்யும்படி வைப்பது, டேன் டீ தேயிலை தூள் ஒரு பாக்கெட் கூட இல்லாமல் இருப்பது என அடிக்கடி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அவலம் குறித்து தெரிவிக்கும் டேன் டீ தொழிற்சங்க நிர்வாகிகள்,
“நஷ்டம் என்கிற பெயரில் டேன் டீ எஸ்டேட்களில் உரம், மருந்து போன்றவற்றை பயன்படுத்துவதில்லை. உண்மையில், டேன் டீ தான் ஆர்கானிக் டீ. அரசு தேயிலை தூளை வாங்கி பயன்படுத்தும் உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், டேன் டீ அவுட்லெட் ஷாப்புகளில் திட்டமிட்டே டேன் டீயை தவிர்த்து, தனியார் தூளை விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் தனியார் நிறுவனங்களே வளம் கொழித்து வருகின்றனர். அரசு நடத்தும் டேன் டீ அவுட்லெட் ஷாப்புகளில் அரசு தேயிலை தூள் இல்லையென்றால், அவை எதற்காக நடத்தப்பட வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகின்றனர்.