dhoni; kohli; Promotion and Regulation of Online Gaming Bill; ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவால் இந்திய வீரர்கள் சுமார் ரூ.200 கோடி வரை இழக்கக்கூடும்.

Share

எப்படியெனில், இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோஹித், ஜஸ்பிரித் பும்ரா, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா ஆகியோர் ட்ரீம் 11 ஒப்பந்தத்தில் இருக்கின்றனர்.

இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், சிராஜ், ஜெய்ஸ்வால், ருத்துராஜ் கெய்க்வாட், ரின்கு சிங், கங்குலி ஆகியோர் My11 சர்க்கிள் (My11 Circle) ஒப்பந்தத்தில் இருக்கின்றனர்.

விராட் கோலி MPL உடனும், தோனி WinZO உடனும் ஒப்பந்தத்தில் இருக்கிறார்கள்.

இந்திய அணி

இந்திய அணி

Cricbuzz ஊடகத்தில் வெளியான தகவலின்படி, கோலியின் ஒப்பந்தம் ஆண்டுக்கு ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி எனவும், ரோஹித், தோனி ஆகியோரின் ஒப்பந்தம் ஆண்டுக்கு ரூ. 6 முதல் ரூ. 7 கோடி எனவும் மதிப்பிடப்பட்டிருக்கிறது.

மற்ற வீரர்களுக்கு சுமார் ரூ. 1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவால் மேற்கண்ட ஆன்லைன் தடை விதிக்கக்கூடும் என்பதால், இந்திய வீரர்களுக்கு ரூ. 150 கோடி முதல் ரூ. 200 கோடி வரை இழப்பு ஏற்படுக்கூடும்.

இதுமட்டுமல்லாது, ஐ.பி.எல் பல அணிகளும் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com