சென்னை : அதிமுக பொதுக்குழுவை நடத்த 2,300க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர். பொதுக்குழுவில் கலந்து கொள்வோம் என உறுதி அளித்தும் மாவட்ட செயலாளர்கள் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.