போல்டா பேசினா…
‘நீயா நானா’ வுல கலந்துக்கப்போறதுக்கு முன்னாடி, மரியாதையா பேசணும். யாரையும் தரக்குறைவா பேசக்கூடாதுன்னு மட்டும்தான் சொன்னோம். வேற எந்த கண்டிஷனும் போடல. ஆனா, ஸ்டேஜ் பயம் இல்லாம, அவளா போல்டா பேசினா. என் பொண்ணை தைரியமா பேச வெச்சிருக்கேன்ல. என் பொண்ணு பேசுறதை ரசிச்சுக்கிட்டிருந்தேன். தாத்தா, பாட்டி, அத்தைங்க எல்லோருமே அவ பேச்சை பார்த்துட்டு ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. அக்கம்பக்கத்துல, டூர் போன இடத்துல எல்லாம் “பொண்ணை நல்லா தைரியமா வளர்த்திருக்கீங்க”ன்னு பாராட்டினாங்க.
இதையெல்லாம் தாண்டி, பையனுக்கு நிறைய வாங்கிக் கொடுக்கணும். இவளுக்கு கம்மியா வாங்கிக் கொடுக்கணும்னுல்லாம் இல்ல. சில ஃபுட் அவன் விரும்பி சாப்பிடுவான். சில ஃபுட் இவ விரும்பி சாப்பிடுவா. இன்னும் சொல்லப்போனா, இவளுக்குத்தான் அதிகமா வாங்கித் தருவேன். வேணும் வேணும்னு சொல்லி சரியா சாப்பிடமாட்டா. இன்னும் சொல்லப்போனா, பொண்ணுக்குத்தான் அதிகமா வாங்கித்தர்றேன்னு பையன் என்கிட்ட சண்டை போடுவான். அன்னைக்கு அவன் ‘நீயா நானா’வுல இருந்திருந்தா அந்த உண்மையும் வெளிவந்திருக்கும்” என சிரிக்கிறார், பிரவீனா வெங்கட் ரவி.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…