இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் உரிமையாளர் மாறுவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன.
தற்போது உரிமையாளராக இருக்கும் பிரிட்டீஷ் பன்னாட்டு மதுபான நிறுவனமான டியாஜியோ பிஎல்சி, பகுதியளவு அல்லது முழுவதுமாக அணியின் உரிமையை விற்க விரும்புவதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
RCB அணியின் விலை மதிப்பு என்ன?
கடந்த வாரம், RCB அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்த வெற்றியால் டியாஜியோ பிஎல்சி குறிப்பிடத்தக்க உயர்வை எட்டியிருக்கிறது.
இந்தியாவில், டியாஜியோ பிஎல்சி மூலம் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் ஆர்சிபி நடத்தப்படுகிறது, ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு அணியின் உரிமையை பணமாக்கும் வழிகளைத் தேடி வருகிறது மதுபான நிறுவனம் என வதந்திகள் பரவின.
இதுவரை RCB அணிக்கான உரிமையின் மதிப்பு எவ்வளவாக இருக்கும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், ப்ளூம்பெர்க் தளம் அதன் உரிமையாளர்கள் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக 16,834 கோடி ரூபாய்) எதிர்பார்க்கலாம் எனக் குறிப்பிட்டிருக்கிறது.