சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘ஒற்றை தலைமை பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காண ஓ பன்னீர் செல்வத்துடன் தம்பிதுரை விவாதித்தார். பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாமல் ஒற்றை தலைமை குறித்து தீர்மானம் கொண்டு வந்தால் அது செல்லாது,’என்றார்.