தலைவாழை: சுவையான சுரைக்காய் போளி | Poli

Share

செய்திப்பிரிவு

Last Updated : 24 Nov, 2019 10:08 AM

Published : 24 Nov 2019 10:08 AM
Last Updated : 24 Nov 2019 10:08 AM

தொகுப்பு: அன்பு

சுரைக்காய் போன்ற காய்களைச் சிலர் கூட்டுக்கு மட்டும்தான் பயன்படுத்துவார்கள். ஆனால், நீர்ச்சத்து அதிகமுள்ள சுரைக்காயில் இனிப்பு, காரம் எனப் பலவிதமான உணவைச் சமைக்க முடியும். அதுவும் குளிர்காலம் தொடங்கும் வேளையில் சுரைக்காயில் போளி, பக்கோடா, கேசரி, அடை போன்ற சுவையான பதார்த்தங்களைச் சமைத்து ருசிக்க உதவுகிறார் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைப் பகுதியைச் சேர்ந்த செ. கலைவாணி.

போளி

என்னென்ன தேவை?

கோதுமை மாவு, சுரைக்காய்த் துருவல் – தலா 1 கப்

வெல்லத் தூள் – அரை கப்

தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்

சுக்குத் தூள், ஏலக்காய் தூள் – தலா 1 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு

நெய் – 6 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

நெய்யில் சுரைக்காய்த் துருவலை நன்கு வதக்குங்கள். சுரைக்காய் வெந்ததும் தேங்காய்த் துருவல், வெல்லத் தூள் இரண்டையும் சேர்த்துக் கிளறிவிடுங்கள். எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து சுருண்டு வரும்போது சுக்குத் தூளையும் ஏலக்காய்த் தூளையும் சேர்த்து இறக்கிவிடுங்கள்.

கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து, சப்பாத்தி மாவுபோல் பிசைந்துகொள்ளுங்கள். மாவு சிறிது நேரம் ஊறிய பிறகு அதைச் சிறு உருண்டையாக எடுத்து சப்பாத்திபோல் திரட்டுங்கள். நடுவில் சுரைக்காய் பூரணத்தை வைத்து மூடி மீண்டும் சப்பாத்தி போல் லோசாகத் திரட்டி தோசைக் கல்லில் போடுங்கள். சுற்றிலும் நெய்விட்டு இரண்டு புறங்களும் நன்றாக வேகவைத்து எடுங்கள்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com