ஆமதாபாத்: வங்கதேசத்தினர் வாழ்வதாகக் கூறி இரவோடு இரவாக இடிக்கப்பட்ட வீடுகள் – என்ன நடந்தது?

Share

ஆமதாபாத்: இரவு முழுவதும் நூற்றுக்கணக்கான வீடுகளை இடித்த புல்டோசர்கள்; எந்த அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது, காவல்துறை என்ன சொல்கிறது?
படக்குறிப்பு, சந்தோலா தலாப் பகுதியில் வசிக்கும் ஒரு பெண், இப்போது தங்குவதற்கு இடமில்லை என்று கூறுகிறார்.

ஆமதாபாத்தின் சந்தோலா தலாப் பகுதியில், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் மக்களுக்கு எதிராக அவர்களது வீடுகளை இடிக்கும் நடவடிக்கை பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது.

எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதையும் தடுக்கும் வகையில், ஆமதாபாத் குற்றப் பிரிவு அதிகாரிகள் சரோஜ்நகர் பகுதியில் ரோந்து பணியைத் தொடங்கியுள்ளனர்.

“சியாசத் நகர் பெங்கால் வாஸில் ஆமதாபாத் மாநகராட்சி (AMC) மேற்கொண்ட ஒரு ஆய்வில், குளத்தை ஆக்ரமித்து சில வீடுகள் கட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது,” என்று ஆமதாபாத் குற்றப் பிரிவின் கூடுதல் போலீஸ் கமிஷனர் ஷரத் சிங்கால் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

அதோடு, “ஆமதாபாத் மாநகராட்சி மேற்கொண்டிருக்கும் இந்த இடிப்புப் பணிகளில் மொத்தம் 50 ஜேசிபிகளும் 2,000 காவல்துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியில் வங்கதேசத்தினரே பெருமளவில் வசிக்கின்றனர்” என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com