ஆபீஸ் செல்வது, வெளியூர் பயணம், லாங் டிரைவ் என காரில் அடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள்?
தாகம் அடிக்கும், தண்ணீர் தேவைப்படும் என உங்கள் கார் டிரிப்பில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் எடுத்துச் செல்பவரா நீங்கள்?
நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

எளிதாக கிடைக்கும், ஒன் யூஸ் என பெரும்பாலும் நாம் தண்ணீர் கொண்டு செல்ல தேர்ந்தெடுப்பது பிளாஸ்டிக் பாட்டில்களை தான். அவைகளில் B.P.A அல்லது Bisphenol A இருப்பதல் பிளாஸ்டிக் பாட்டில்கள் மிக மிக ஆபத்து என்று கூறுகிறார்கள்.
ஏன்?
கார் பயணத்தின் போது, இன்ஜீன், காலநிலை, மனிதனின் தட்ப வெட்பம் போன்றவற்றால் காரினுள் வெப்பம் பரவும். இந்த வெப்பம் பாட்டிலில் இருக்கும் மேலே கூறியுள்ள ரசாயனங்களை உடைய செய்யும். உடைந்த ரசாயனங்கள் தண்ணீரில் கரைந்துவிடும்.
அப்படி கரைந்த தண்ணீரை நாம் பருகும்போது, நம் உடலினுள் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் சென்று சேரும். மேலும், சூடான பிளாஸ்டிக்கில் கிருமிகள் பெருகும்.

என்ன ஆகும்?
அந்தத் தண்ணீரை நாம் பருகும்போது புற்றுநோய், ஹார்மோன் பாதிப்பு, குழந்தையின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
இதற்கு பதிலாக என்ன செய்யலாம்?
பயணங்களின் போது, பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக, ஸ்டீல் அல்லது கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்தலாம்.
பாட்டில்களை சூடான தண்ணீரில் கழுவவது கட்டாயம்.
எந்தப் பாட்டிலில் தண்ணீர் எடுத்துச் சென்றாலும், முடிந்தளவு அந்தத் தண்ணீரை 2 மணி நேரத்திற்குள் குடித்துவிடுவது நல்லது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
