`ஆவினில் வேலை’ ரூ.3கோடி மோசடி வழக்கு – ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் எப்போது?

Share

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முன்னாள் அமைச்சர்‌ ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டது.

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

இந்த உத்தரவுக்கு தடைவிதிக்கக்கோரி ராஜேந்திர பாலாஜி சார்பில் வழக்கறிஞர் ஏ.வேலன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பங்கஜ்மித்தல், எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அமர்வு கடந்த மாதம் 17-ம் தேதி விசாரித்தது.

அப்போது இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com