தண்டையார்பேட்டை: சென்னை வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் திராவிட மாடல் ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் மற்றும் கலைஞர் 99வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் ராயபுரம் எஸ்.என்.செட்டி தெருவில் உள்ள அறிவகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா தலைமை வகித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கோவிந்தசாமி செய்திருந்தார். சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு ரத்ததான முகாமை தொடங்கிவைத்தார். ரத்ததானம் செய்தவர்களுக்கு பரிசு பொருளும் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆர்.கே.நகர் பகுதி செயலாளர்கள் ஜெபதாஸ் பாண்டியன், லட்சுமணன், ராயபுரம் பகுதி செயலாளர் செந்தில்குமார், சென்னை மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவர் நேதாஜி, கணேசன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் அருளரசன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர், மருது கணேஷ், துணை அமைப்பாளர் மதன்ராஜ் மற்றும் பொதுமக்கள் திமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.