தனுசு: கடன் தொல்லைகள் விலகும்; கவனமாக இருக்க வேண்டியது எதில்?

Share

சிறந்த ஞானமும் நேர்மறைச் சிந்தனையும் கொண்டவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 11-வது ராசி யில் விசுவாவசு தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டில் உங்களுக்கான துல்லியமான 15 பலன்களை விவரிக்கிறார் ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்.

1. குருவை அதிபதியாகக் கொண்டது தனுசு ராசி. அறிஞர்களாகவும் மேதாவிகளாகவும் திகழ்வார்கள். சிந்தனை வளம், உடல் வலிமை, எதிரியை வீழ்த்தும் தகுதி ஆகியற்றைப் பெற்றிருப்பார்கள். இந்த ராசிக்கு லாப ஸ்தானத்தில் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பது, பெரும் பாக்கியமான நிலை ஆகும். மனதில் இருக்கும் விருப்பங்கள் யாவும் நிறைவேறும்.

2. வேலை, தொழில், சொந்த வீடு, வாகனம் போன்றவை குறித்த உங்களின் கனவுகள் நனவாகும். வீட்டில் சுபகாரியங்களைத் திட்டமிட்டபடி நடத்துவீர்கள். வீடு-மனை வாங்கும் காரியங்கள் சாதகமான பலனைத் தரும் எனலாம்.

தனுசு ராசி

3. இந்த வருடம் கிரகப்பெயர்ச்சிகளும் சாதகமான நிலையில் உள்ளன. ஏப்ரல்-26 அன்று ராகு,கேது பெயர்ச்சி நிகழ்கிறது. ராகு பகவான், ராசிக்கு 3-ம் வீட்டிற்கு வந்து அமர்கிறார். எதிலும் வெற்றி உண்டாகும். முயற்சியில் இருந்த முட்டுக்கட்டைகள் யாவும் நீங்கி, பெரும் முன்னேற்றத்தைத் தரும்.

4. தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். உங்களுக்கு வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணி முழுமை அடையும். வண்டி-வாகனப் பழுது நிலை நீங்கும். சிலருக்குப் புது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

5. கழுத்தை நெருக்கிப் பிடித்த கடன் தொல்லைகளை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிட்டும்.

6. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளுக்கு தள்ளிப்போய்க் கொண்டிருந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு கூடி வரும்.

7. கேது 9-க்கு வருகிறார். இதனால் அத்தியாவசிய செலவுகள் உண்டாகும். எனினும் வேலைச்சுமை குறையும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல் குழப்பங்கள் மாறும். மூத்த சகோதரர் பக்கபலமாக இருப்பார். எனினும் உங்கள் தந்தையாரின் உடல்நிலை சற்று பாதிக்கப்படலாம்.

8. கேது 10-ம் வீட்டிலிருந்து விலகுவதால் உத்தியோகத்தில், நல்ல சூழல் உண்டாகும். சிலருக்கு ஊதிய உயர்வு வந்து சேரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.

தனுசு

9. இந்த வருடம் மே-11 முதல் சாதனை குருவாக 7-ல் அமர்ந்து பலன் தரப்போகிறார் குருபகவான். உங்களின் துறையில் நீங்கள் சாதனை படைப்பீர்கள். தொழிலிலும் மேன்மை உண்டாகும்.

10. வங்கிக்கடனுதவியுடன் சொந்த வீடு வாங்குவீர்கள். வெளி மாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். சொத்துப் பிரச்னை தீரும்.

11. திருமண வயதில் உள்ள இளைஞர்களுக்குத் திருமண வாய்ப்புகள் தேடிவரும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை மூலம் பணவரவுக்கு வாய்ப்புண்டு. பிள்ளைவரம் வேண்டுவோருக்குப் பிள்ளை வரம் கிடைக்கும்.

12. குருபகவான் உங்கள் லாப வீட்டைப் பார்ப்பதால் தொட்ட காரியம் துலங்கும். மூத்த சகோதரரால் ஆதாயம் உண்டு. இளைய சகோதரர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும்.

13. தொழில் ஏற்றுமதி விஷயங்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். விலையுயர்ந்த தங்க ஆபரணம் வாங்கும் யோகம் உண்டாகும்.

14. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். கடையை விரிவுபடுத்துவீர் கள். நூதன விளம்பரங்களால், போட்டியாளர்களைத் திணறடிப் பீர்கள். எனினும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப முதலீடு செய்து பலன் பெற வேண்டும்.

15. நீங்கள் முருகப்பெருமானை வணங்குவதால், பெரும் முன்னேற்றம் காணலாம். தென்காசி அருகிலுள்ள பண்பொழில் முருகப்பெருமான் கோயிலுக்குச் சென்று, மனதார வணங்கி வழிபட்டு வாருங்கள்; நீங்கள் நினைத்தது நிறைவேறும்!

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com