இந்திய ராணுவத்தை வழி நடத்திய ஜெனரல் சுந்தர்ஜி- பாகிஸ்தானை பதற வைத்த கதை

Share

ஜெனரல் சுந்தர்ஜி: பீரங்கிகள் முதல் மோட்டார் சைக்கிள்கள் வரை அனைத்திலும் ஆர்வம் கொண்டிருந்த 'ஸ்காலர் ஜெனரல்'

பட மூலாதாரம், Happer Collins

படக்குறிப்பு, ஜெனரல் கே சுந்தர்ஜி

முகர்ஜி, பானர்ஜி அல்லது சாட்டர்ஜி போல சுந்தர்ஜி பெங்காலியா அல்லது ஃபிரோஜி அல்லது ஜாம்ஷெட்ஜி போல பார்ஸியா என்று மக்கள் அடிக்கடி கேட்பார்கள். சிலர் அவரை ஒரு சிந்தி என்றும் கருதினர்.

ஜெனரல் சுந்தர்ஜியின் மனைவி வாணி சுந்தர்ஜி தனது ‘எ மேன் கால்ட் சுந்தர்ஜி’ என்ற கட்டுரையில், “உங்கள் பெற்றோர் இருவரும் தமிழர்கள். ஆனாலும் உங்களுக்கு சுந்தர்ஜி என்ற பெயர் எப்படி வந்தது என்று எங்கள் திருமணத்தின் ஆரம்ப நாட்களில் நான் அவரிடம் கேட்டேன்,” என்று எழுதியுள்ளார்.

“எனக்கு மூன்று வயதாக இருந்தபோது என் பெற்றோர் காந்திஜியை பற்றி அடிக்கடி பேசுவதை நான் கேட்பேன். ஒரு நாள் நான் என் தந்தையிடம், நீங்கள் எந்த காந்திஜியை பற்றிப் பேசுகிறீர்கள் என்று கேட்டேன்.

மகாத்மா காந்தி ஒரு மிகச் சிறந்த மனிதர். அவரை கௌரவிக்கும் விதமாக நாம் அவரது பெயருடன் ‘ஜி’யை சேர்க்கிறோம் என்று என் தந்தை பதிலளித்தார். அன்று முதல் என்னையும் சுந்தர்ஜி என்று அழைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். என் தந்தை இதற்கு ஒப்புக்கொண்டார் என்று அவர் பதில் சொன்னார்,” என்று வாணி சுந்தர்ஜி குறிப்பிடுகிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com