"இலவு காத்த கிளி போல எடப்பாடி காத்துக்கொண்டிருந்தார்" – விமர்சனத்திற்குத் திருமாவளவன் பதில்

Share

2026 சட்டசபைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன.

கூட்டணி அமைக்கும் வேலையில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அண்மையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவைச் சந்தித்துப் பேசினார்.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

தொடர்ந்து பல்வேறு கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 9) செய்தியாளர்களைச் சந்தித்த வி.சி.க தலைவர் தொல். திருமாவளவனிடம், “கூட்டணிக் கட்சிகள் எல்லாம் நிர்பந்தத்தின் பேரில்தான் தி.மு.க-வில் இருக்கிறார்கள். தி.மு.க கூட்டணி கட்சிகள் காற்றோடு கரைந்து விடுவார்கள் என்று எடப்பாடி கூறியிருக்கிறார். இதற்கு உங்களின் பதில் என்ன?” என்று செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பி இருந்தனர்.

இதற்குப் பதிலளித்த அவர், “இது விரக்தியின் வெளிப்பாடுதான். தி.மு.க கூட்டணியில் இருந்து சில கட்சிகள் எப்போது பிரிந்து வரும் என்று இலவு காத்த கிளி போல காத்துக் கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி.

தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன்

அது நடக்கவில்லை. தி.மு.க கூட்டணி பலமாக இருப்பதால் விரக்தியில் இதுபோன்ற கருத்துக்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com