IPL 2025: ஜான் சீனா – விராத் கோலி; champions ring; viral video

Share

WWE மல்யுத்த வீரர் ஜான் சீனாவின் “யூ கேன் நாட் சீ மி’ என்ற சைகையைச் செய்து நடனம் ஆடிய விராட் கோலியின் வீடியோ இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

கடந்த திங்கட்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.

இந்த போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை அதனுடைய சொந்த மைதானத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளது பெங்களூரு அணி.

இந்நிலையில் இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, விராட் கோலி பிரபல WWE மல்யுத்த வீரரான ஜான் சீனாவின் “யு கேன் நாட் சீ மீ (you can’t see me)” என்ற சைகையை வெளிப்படுத்திய வீடியோவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளது. 

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com