சதமடித்து சிஎஸ்கேவை கலங்கடித்த பிரியான்ஷ் ஆர்யா – சென்னை மீண்டும் தோல்வி

Share

சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப், ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

மொகாலியில் ஐபிஎல் டி20 போட்டியின் 22-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது.

டாஸ்வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். பிரியான்ஷ் ஆர்யாவின் அற்புதமான இன்னிங்ஸால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களைக் குவித்தது.

220 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் செய்த சென்னை அணி சீராக ரன்களைச் சேர்த்த போதிலும், பிரமாண்ட இலக்கை எட்ட முடியவில்லை.

12 பந்துகளை எதிர்கொண்ட தோனி 27 ரன்களைக் குவித்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார். கடைசி ஓவரின் முதல் பந்தில் அவர் ஆட்டமிழந்ததால் அணியின் நம்பிக்கை தகர்ந்தது. 20 ஓவர்கள் முடிவில் சென்னை 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com