பள்ளிச் சீருடை தைப்பதற்கு ஆண் டெய்லர்கள் மூலம் அளவெடுக்க கட்டாயப்படுத்தியதாக மாணவி அளித்த புகாரில் ஆசிரியை மீதும் ஆண், பெண் என இரு டெய்லர்கள் மீதும் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவிகளுக்கான சீருடை தைப்பதற்கு அளவெடுக்க இன்று டெய்லர்களை அழைத்து வந்துள்ளனர். ஒரு பெண் டெய்லருடன், ஆண் டெய்லரும் அளவெடுதத்தை பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் எதிர்த்துள்ளார்.
ஆனால், பள்ளி ஆசிரியை அந்த மாணவி உள்ளிட்ட அனைத்து மாணவிகளையும் கட்டாயப்படுத்தி அளவு எடுக்க வைத்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் பாதிப்படைந்த அம்மாணவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, விசாரணை நடத்திய போலீசார், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியையுடன் டெய்லர் மீதும் போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.