குறிப்பாக, மிடில் ஓவர்களில் கொல்கத்தா அணியின் பௌலர்கள் ராஜஸ்தான் அணியின் விக்கெட்டை கொத்தாக அள்ளியிருந்தனர். குறிப்பாக, 8-11 இந்த 4 ஓவர்களிலும் ஓவருக்கு தலா 1 விக்கெட் விழுந்திருந்தது. கொத்தாக விழுந்த இந்த 4 விக்கெட்டுகள்தான் ராஜஸ்தானின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. விக்கெட்டுகள் கொத்தாக விழுந்த அந்த 4 ஓவர்களையும் வீசியது வருண் சக்கரவர்த்தியும் மொயீன் அலியுமே.
‘ரஹானேவின் வின்னிங் மூவ்!’
ரஹானே மொயீன் அலியையும் வருணையும் பவர்ப்ளே முடிந்தவுடன் 7 வது ஓவரிலிருந்து தொடர்ச்சியாக 7 ஓவர்களை வீச வைத்திருந்தார். இந்த நீண்ட ஸ்பெல்தான் ராஜஸ்தான் அணியை வீழ்ச்சியை நோக்கித் தள்ளியது. இந்த 7 ஓவர்களில் வருணும் மொயீன் அலியும் இணைந்து 38 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தனர். அதேநேரத்தில் ஜெய்ஸ்வால், ரியான் பராக், நிதிஷ் ராணா, வனிந்து ஹசரங்கா என நால்வரின் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.