Doctor Vikatan: 18 வயது பெண்ணுக்கு நரைமுடி வருவதை தடுக்க முடியுமா? இளநரை பிரச்னைக்கு தீர்வு என்ன?

Share

உங்கள் மகளுக்கு தினமும் நெல்லிக்காய் ஜூஸ் கொடுப்பதை வழக்கப்படுத்துங்கள். ஜூஸாக கொடுக்க முடியாவிட்டால் நெல்லிக்காய் லேகியம் கொடுக்கலாம். கறிவேப்பிலையை முடிந்த அளவுக்கு உணவில் சேருங்கள். பொடியாகவோ, துவையலாகவோ… வாய்ப்பிருக்கும் வகையில் எல்லாம் தினமும் கறிவேப்பிலை உடலுக்குள் சேரும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.  உங்கள் மகளை வாரம் இருமுறை எண்ணெய்க் குளியல் எடுக்கச் சொல்லுங்கள். முளைக்கட்டிய பயறு வகைகளை அடிக்கடி சாப்பிடச் சொல்லுங்கள். வெளி உணவுகளைக் கூடியவரை தவிர்ப்பது நல்லது. எப்போதாவது ஒருநாள் சாப்பிடுவதில் பிரச்னையில்லை. அது அடிக்கடி நிகழ்கிற வழக்கமாக இருக்க வேண்டாம்.  நிறைய காய்கறிகள், கீரைகள், பழங்கள் சாப்பிடச் சொல்லுங்கள். 

இளநரை பிரச்னைக்கு இஞ்சித்தேன் மிகச் சிறந்த மருந்தாகச் செயல்படும். இதை எளிய முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம்.

இளநரை பிரச்னைக்கு இஞ்சித்தேன் மிகச் சிறந்த மருந்தாகச் செயல்படும். இதை எளிய முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம்.
freepik

இளநரை பிரச்னைக்கு இஞ்சித்தேன் மிகச் சிறந்த மருந்தாகச் செயல்படும். இதை எளிய முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம். 

இஞ்சியின் மேல் தோலைச் சீவிவிட்டு, சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். அதில் குண்டூசி கொண்டு சிறு சிறு ஓட்டைகள் போட்டு, மலைத் தேனில் ஊற வைக்கவும். அடுத்த நாள் முதல் தினம் ஒரு துண்டு என்ற ரீதியில் காலையில் சாப்பிட்டு வரலாம். இந்த இஞ்சித் தேனை முறையாகச் சாப்பிட்டு வந்தால்  நரை தோன்றுவது தள்ளிப் போகும்; தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதற்கான வயதும் தள்ளிப் போகும்! நோய்களுக்குத் தடை விதிக்கும். தேவைக்கு ஏற்ப அளவோடு தயாரித்துப் பயன்படுத்தலாம். மலைத்தேன் என்பது விவசாயிகளிடமிருந்தோ, மலைவாழ் மக்களிடமிருந்தோ கிடைக்கும்.  அதை வாங்கிப் பயன்படுத்தவும். சித்த மருத்துவத்தில் கரிசாலை கற்பம் என்ற மாத்திரையும் இளநரை பிரச்னைக்கு உதவும். மருத்துவர் பரிந்துரையோடு அதையும் கொடுக்கலாம். உங்கள் மகளை நிறைய நீர்மோர் குடிக்கச் சொல்லுங்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com