Dhoni: “தோனிக்காக விட்டுக்கொடுப்பேன் என ரசிகர்கள் நம்பினர்; ஆனா…” – வின்னிங் ஷாட் குறித்து ரச்சின்

Share

ஐ.பி.எல் 18-வது சீசனின் மூன்றாவது போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (மார்ச் 23) நடைபெற்றது.

ருத்துராஜ் தலைமையிலான சென்னை அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணியும் மோதிக்கொண்ட இந்த ஆட்டத்தில், 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது.

சென்னை அணியில் நூர் அகமது அபாரமாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதேபோல், பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா ஓப்பனிங்கில் இறங்கி ருத்துராஜுடன் அரைசத பார்ட்னர்ஷிப் அமைத்து இறுதியில் தோனியை நான்-ஸ்ட்ரைக்கரில் நிற்க வைத்து வின்னிங் ஷாட் சிக்ஸுடன் ஆட்டத்தை முடித்துக்கொடுத்தார்.

ரச்சின் ரவீந்திரா

ரச்சின் ரவீந்திரா
https://x.com/ChennaiIPL

கடந்த சீசனில் சென்னை அணி மூலம் ஐ.பி.எல்-இல் அறிமுகமாகிய ரச்சின் ரவீந்திரா, பேட்டிங்கில் தோனியுடன் களத்தில் நின்றது இதுவே முதல்முறை.

வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் தோனியுடனான மொமென்ட் குறித்துப் பேசிய ரச்சின் ரவீந்திரா, “அணிக்காகப் போட்டியை வெல்வதில் கவனமாக இருக்கும்போது, அந்த மொமென்ட்டை முழுமையாக எடுத்துக்கொள்வது கடினம்.

அதே சமயம், அந்த உற்சாகம், தோனிக்கான ஆரவாரம், விசில் போன்றவற்றைப் புறக்கணிப்பதும் கடினம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com