சென்னை: கணவரை திருத்த முடியாத விரக்தியால் பெண் காவலர் தற்கொலை – இன்றைய டாப்5 செய்திகள்

Share

பெண் காவலர் தற்கொலை

பட மூலாதாரம், DAILY THANTHI

படக்குறிப்பு, மரணமடைந்த பெண் காவலர் செல்வி மற்றும் அவரது கணவர்

குற்ற வழக்குகளில் தொடர்புடைய கணவரை திருத்தும் முயற்சி தோல்வியடைந்ததால் பெண் காவலர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியில் “சென்னை புளியந்தோப்பு போலீஸ் குடியிருப்பில் பெண் போலீஸ் செல்வி (வயது 39) நேற்று முன்தினம் தற்கொலையால் மரணமடைந்தார்.

பணிச்சுமையால் அவர் தனது உயிரை மாய்த்து கொண்டாரா ? என்று முதலில் கேள்வி எழுந்திருந்தது. ஆனால் காரணம் குறித்து உருக்கமான தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது. “செல்வியின் சொந்த ஊர் சிவங்கை மாவட்டம் மானாமதுரை ஆகும். இவர் தனது உறவினரான நல்லுச்சாமியை 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். 2008-ம் ஆண்டு அவருக்கு போலீஸ் பணி கிடைத்தது. சொந்த மாவட்டத்திலேயே பணியாற்றி வந்தார்.

ஆனால் நல்லுச்சாமியின் தவறான சகவாசம் அவரை ரவுடியாக மாற்றியது. 3 கொலை வழக்குகள், 9 கொலை முயற்சி வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகளில் அவர் சிக்கினார். இதனால் சிவகங்கை மாவட்ட போலீசில் ‘ஏ1’ ரவுடி பட்டியலில் நல்லுச்சாமியின் பெயர் இடம் பெற்றது.

கடந்த 2022-ம் ஆண்டு சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய அதிகாரி, செல்வியை அழைத்து கண்டித்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com