ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் பேசிய ஹர்பஜன் சிங், “முதலில், டிராவிஸ் ஹெட் மீதான பயத்தை உங்கள் மனதில் இருந்து அகற்றிவிட்டு, அவரை அவுட்டாக்க முயற்சி செய்யுங்கள். ஷமி சார், போதும் டிராவிஸ் ஹெட்டை இனி ரன் அடிக்க விடாதீர்கள். இரண்டாவது, அந்த அணியில் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ் போன்ற ஹிட்டர்கள் இருக்கின்றனர். அவர்கள் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசுகிறார்கள். எனவே, வேகப்பந்து வீச்சில் அவர்களை ரன் அடிக்க விடாதீர்கள். மூன்றாவது, இதுவொரு நாக் அவுட் கேம். நீங்கள் அதிகம் முயற்சி செய்யத் தேவையில்லை. இதுவரை நீங்கள் விளையாடியதைப் போலவே விளையாடுங்கள்.” என்று கூறினார்.
மேலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, “2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றிருக்கிறது. அதோடு, 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா விளையாடியிருக்கிறது. எனவே, ஒயிட் பால் கிரிக்கெட்டில் (ஒருநாள் மற்றும் டி20) இந்திய அணி வலுவான அணியாக இருக்கிறது. எதிரணி எதுவாக இருந்தாலும் கவலையில்லை. அதை வீழ்த்தும் திறன் இந்திய அணியிடம் இருக்கிறது” என்று பாசிட்டிவாகக் கூறினார்.