ISWOTY: மனு பாக்கர் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனையாக தேர்வு – யாருக்கு என்ன விருது?

Share

ISWOTY
படக்குறிப்பு, பிபிசியின் டைரக்டர் ஜெனரல் டிம் டேவியும், இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோமும் இணைந்து மனு பாக்கருக்கு விருதை வழங்கினர்.

உலகளாவிய பொது வாக்கெடுப்பை தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு (ISWOTY) ஒலிம்பிக் வீராங்கனை மனு பாக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிபிசியின் டைரக்டர் ஜெனரல் டிம் டேவியும், இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோமும் இணைந்து மனு பாக்கருக்கு இந்த விருதை வழங்கினர்.

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்றதன் மூலம், ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்தார். மனு பாக்கர் முன்னதாக பிபிசியின் சிறந்த வளரும் வீராங்கனையாக 2021-ல் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

ISWOTY

விருது பெற்றுக் கொண்ட பிறகு பேசிய மனு பாக்கர், “இந்த விருதை வழங்கியதற்காக பிபிசிக்கு நன்றி. எனது விளையாட்டு வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஒரு பயணம். நான் பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளேன். தற்போது உங்கள் முன்பு இங்கு நிற்பது எனக்கு பெருமையாக உள்ளது” என்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com