திருவள்ளூரில் பூண்டி ஒன்றிய செயலாளர் இல்ல திருமணம் அதிமுகதான் எதிர்கட்சி; பாஜ அல்ல: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விளாசல்

Share

திருவள்ளூர்: பூண்டி ஒன்றிய தேமுதிக செயலாளர் புதூர் ஜெ.பாலாஜி-ஒன்றிய கவுன்சிலர் பி.பிரபாவதி இல்ல திருமண விழா திருவள்ளூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். நகர செயலாளர் எஸ்.மணிகண்டன், மாவட்ட நிர்வாகிகள் ஆயில் கே.சரவணன், புஜ்ஜி ஜெ.முரளி கிருஷ்ணன், ஒண்டிகுப்பம் ஆர்.சேகர் வரவேற்றனர்.

விழாவுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தலைமை வகித்து, மணமக்களை வாழ்த்தி பேசினார். இதைதொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தேமுதிக ஒரு போதும் அனுமதிக்காது. கும்மிடிப்பூண்டி அருகே தீண்டாமை சுவர் கட்டப்பட்டதை தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். யாராக இருந்தாலும் ஜாதி, மதங்களை இழிவுப்படுத்தும் வகையில் நடக்க கூடாது. அவரவர்கள் ஜாதி அவர்களுக்கு முக்கியமானது. ஆகையால் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீண்டாமை சுவரை இடித்து அகற்ற வேண்டும்.

தமிழகத்தில் அதிமுகதான் தற்போது எதிர்கட்சியாக உள்ளது. பாஜ எதிர்க்கட்சியாக இல்லை. பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசு மீது தினமும் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார். ஆனால் எதையும் நிரூபிக்கவில்லை. அவர் வைக்கும் குற்றச்சாட்டுகளை நிரூபித்து உரிய தண்டனை பெற்று தரலாம்’ என்றார். விழாவில், மாநில துணை செயலாளர் ப.பார்த்தசாரதி, டி.கே.தியாகராஜன், எம்.பாஸ்கர்ராஜ், ந.ஞானமூர்த்தி, சசிகுமார், ஒன்றிய நகர செயலாளர்கள் பா.ரஜினிகாந்த், பி.மணவாளன், இ.சுதாகர், ஏ.ராஜி, எஸ்.டி.மாதவன், ஹரிபாபு, சுரேஷ், எஸ்.ஸ்ரீநிவாசன், நகர, ஒன்றிய நிர்வாகிகள் பி.மகேந்திரன், டில்லி, அருண்ராஜ், பாலச்சந்தர், கோதண்டன், சுரேஷ்பாபு, ராஜா, கார்த்திக், ஆறுமுகம், ஏழுமலை, என்.டி.குமரகுரு, ஆர்.பி.நாகராஜ், மதியழகன், அரிகிருஷ்ணன், சுனிதா, மணி, பால்ராஜ், செந்தில், பிரபாகரன், மணிவண்ணன், ஆண்ட்ரோஸ், மேகநாதன் உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com