வங்கிக் கொள்ளை: ஸ்காட்லாந்து யார்டு போலீசையே திகைக்கச் செய்த கொள்ளை – 53 ஆண்டுகளாக மர்மம் விலாகதது ஏன்?

Share

லாய்ட்ஸ் வங்கி கொள்ளை, பிரிட்டன், பேக்கர் தெரு கொள்ளை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பேக்கர் தெருவில் அமைந்திருக்கும் லாய்ட்ஸ் வங்கி

  • எழுதியவர், பெத்தன் பெல்
  • பதவி, பிபிசி செய்திகள்

1971-ஆம் ஆண்டின் இலையுதிர் காலம் அது. வரலாற்றில் பிரமிப்பை ஏற்படுத்திய ஒரு வங்கிக் கொள்ளையை அரங்கேற்றியிருந்தனர் அந்த ஒரு குழுவினர்.

திறமையான, அமைதியான, குற்ற தொடர்புகள் கொண்ட அந்த குழுவினர், ஷெர்லாக் ஹோம்ஸ் கதையால் ஈர்க்கப்பட்டு ஒரு வார இறுதியில் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றினர்.

வங்கியில் பணத்தை பத்திரமாக வைத்திருக்கும் வங்கியின் பணப்பெட்டக அறைக்கு துளையிட்டு சென்ற அவர்கள், அங்கே பணம் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களை சேமித்து வைத்திருந்த நூற்றுக்கணக்கான பெட்டிகளில் இருந்து பணத்தை எடுக்க ஆரம்பித்தனர். அதே நேரத்தில் அவர்கள் பயன்படுத்திய வாக்கி-டாக்கியின் அலைவரிசை மூலமாக, பெட்டக அறையில் அவர்கள் நடத்திய உரையாடல்களை கேட்டுக் கொண்டிருந்தார் ஒரு நபர்.

பணப்பெட்டக அறையின் மற்றொரு புறம் காவல்துறையினர் காவலுக்கு நிற்க, இவர்களோ கொள்ளையில் ஈடுபட்டிருந்தனர். யாருக்கும் உள்ளே சென்று என்ன நடக்கிறது என்று பார்க்க கூட தோன்றவில்லை.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com