இலங்கை: தமிழ் தேசிய கட்சிகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பின்னடைவை சந்தித்தது ஏன்?

Share

இலங்கை, தமிழ் தேசியக் கட்சிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில், முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழ் தேசியக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி, தேசியக் கட்சியான தேசிய மக்கள் சக்தி கூடுதல் இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

தமிழர் பகுதிகளில் தமிழ் தேசியக் கட்சிகள் பின்னடைவை சந்திக்க என்ன காரணம்? இனி தமிழ் தேசியக் கட்சிகளின் எதிர்காலம் என்ன? இலங்கையில் பாரம்பரிய தேசியக் கட்சிகளை முறியடித்து பெருவெற்றி கண்டுள்ள தேசிய மக்கள் சக்தி, தமிழர் பகுதிகளிலும் வெற்றியை ஈட்டியது எப்படி?

தமிழ் தேசியக் கட்சிகளுக்கு பின்னடைவு

இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஜனாதிபதி அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி கூடுதல் இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் மொத்தமுள்ள 6 இடங்களில் மூன்று இடங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள மூன்று இடங்களை இலங்கை தமிழ் அரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், சுயேச்சைக் குழு ஒன்று ஆகியவை பகிர்ந்துகொண்டிருக்கின்றன. தமிழரசுக் கட்சி வலுவாக உள்ளதாகக் கருதப்படும் யாழ்ப்பாணத்தில், தேசிய மக்கள் சக்தி மூன்று இடங்களைப் பெற்றதும் சுயேச்சையாக ஒருவர் தேர்வானதும் தமிழ் தேசியக் கட்சிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com