டொனால்ட் டிரம்ப் எப்போது அமெரிக்க அதிபர் ஆவார்?

Share

டிரம்ப் எப்போது அமெரிக்க அதிபர் ஆவர்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவின் அடுத்த அதிபர் டிரம்ப் என்றாலும், அதை உறுதி செய்யும் இறுதி தேர்தல் முடிவுகள் இன்னும் வரவில்லை.

வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு, அமெரிக்காவின் அடுத்த அதிபராகிறார் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப். இரண்டாவது முறையாக வெள்ளை மாளிகைக்குள் நுழையப் போகிறார்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுடனான போட்டி மிக நெருக்கமானதாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் ஒரே இரவில், அதிபராவதற்கு தேவையான வாக்குகளை டிரம்ப் பெற்றுள்ளார் என்பது உறுதியானது.

கடந்த 130 ஆண்டுகளில், ஒரு முன்னாள் அதிபர் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும், 78 வயதான ஒருவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதும் முதல் முறையாகும்.

தேர்தல் முடிவுகள் எப்போது இறுதி செய்யப்படும்?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் உள்ளிட்ட உலக தலைவர்கள் ஏற்கனவே டிரம்பிற்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துவிட்டனர். எனினும், அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் அதிகாரபூர்வமாக இன்னும் இறுதிசெய்யப்படவில்லை.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com