இந்தியாவை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியா அசால்ட்டாக தட்டிச்செல்லும் என்று அறுதியிட்டு கூறியிருக்கிறார் ரிக்கி பாண்டிங்.
முகமது சமி இல்லாததால் ஒரு போட்டியில் 20 விக்கெட் எடுப்பதே இந்திய அணிக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 4 பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரையும் இந்தியா வென்றிருப்பதனால், இந்தமுறை இந்தியாவை வென்று தங்களை நிரூபிப்பதில் முனைப்பாக இருக்கிறது ஆஸ்திரேலிய அணி.
மறுபுறம் இந்திய அணியோ வரலாற்றுத் தோல்வியை சந்தித்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணிலேயே 0-3 என ஒயிட்வாஷ் ஆகியிருக்கிறது. இதனால் இந்தியாவை ஆஸ்திரேலியா வீழ்த்த இது சிறந்த தருணம் என நம்புகிறார் பாண்டிங்.
ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் இருந்தாலும் முகமது ஷமி இல்லாதது இந்தியாவின் பௌலிங் அட்டாக்கில் மிகப் பெரிய ஓட்டை எனக் கணக்கிடுகிறாட் ரிக்கி பாண்டிங்.
“முன்னெல்லாம் ஷமி ஃபிட்டாக இருக்கிறாரா இல்லையா என்ற யூகங்கள் இருந்தன. இப்போது, அவர்களது பௌலிங் குழுவில் ஷமி மிகப் பெரிய ஓட்டையை உருவாக்கியுள்ளார்.” என்று ஐசிசி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார் ஷமி.
“இப்போது அவர்களுக்கு இருக்கும் பேட்ஸ்மேன்களை வைத்து அவர்களால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். ஆனால் ஒரு போட்டியில் 20 விக்கெட் எடுப்பது அவர்களுக்கு கடினமான சவாலாக இருக்கும்.

ஆஸ்திரேலேயா நன்றாக செட்டில் ஆன அனுபவம் வாய்ந்த அணியாக இருக்கின்றது. சொந்த மண்ணில் தோற்கடிக்க கடினமான அணியும் கூட. எனவே நான் 3-1 என்ற அளவில் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக வெற்றி விகிதம் இருக்கும் என நினைக்கிறேன்” என்று கூறினார்.
இந்த போட்டிகளில் அனுபவம் வாய்ந்த வீரரான ஸ்டீவ் ஸ்மித்தும் இந்தியாவின் ரிஷப் பண்ட்டும் அதிகம் ரன் சேர்ப்பவர்களாக இருப்பார்கள் என்று ரிக்கி கணித்துள்ளார்.
விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41