அமெரிக்க அதிபர் தேர்தல்: தேர்தலில் இடையூறு செய்ய ரஷ்ய அமைப்பு திட்டமா? உளவுத்துறை கூறியது என்ன?

Share

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: தொடங்கியது வாக்குப்பதிவு - சமீபத்திய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

[இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப் படுகிறது.]

இன்று (நவம்பர் 5) அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது. அமெரிக்கர்களில், 8.1 கோடிக்கும் அதிகமான மக்கள் ஏற்கெனவே வாக்களித்துள்ளனர். ஆனால் இன்னும் ஏராளமான மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

ஓஹையோ, மேற்கு விர்ஜீனியா மற்றும் வட கரோலினாவில் இந்த முறை அதிக வாக்குப் பதிவு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை 11 அமெரிக்க மாகாணங்களில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

முடிவுகளைத் தீர்மானிக்கும் மாகாணங்களில் ஒன்றான வட கரோலினாவில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. சமீபத்திய ஹெலென் சூறாவளியால் இந்த மாகாணம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்தச் சூறாவளிக்குப் பலியானோரின் மொத்த எண்ணிக்கையில் பாதிப் பேர் வட கரோலினாவை சேர்ந்தவர்கள்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com