முருகனின் அறுபடை வீடுகளில் கடற்கரை ஓரத் தலமும், இரண்டாம் படை வீடாகவும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகச்சிறப்பானது. 6 நாள்கள் நடைபெறும் இந்த கந்தசஷ்டி திருவிழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கி இருந்து விரதம் மேற்கொள்வார்கள். இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா, வரும் நவம்பர் 2-ம் தேதி தொடங்க உள்ளது.
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா… பக்தர்களுக்கான வசதிகள், விழா ஏற்பாடுகள் தீவிரம்..! | Tiruchendur kanda sashti Festival; Preparations are in swing
Share