`மாணவர்கள் பாதுகாப்பு முக்கியம்; பயிற்சி மையங்களில் ஒரே சீரான தரநிலைகள் வேண்டும்’ – உச்ச நீதிமன்றம் | SC stresses on uniform standards to ensure students’ safety at coaching centres

Share

டெல்லியில் கடந்த ஜூலை மாதம் பெய்த தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அந்த சூழலில் ஜூலை 27-ம் தேதி, பேராஜேந்திர நகர் பகுதியில் உள்ள ராவ் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய கட்டடத்தின் அடித்தளம் வெள்ள நீரில் மூழ்கியதால் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரேயா யாதவ் (25) , தெலங்கானாவைச் சேர்ந்த தன்யா சோனி (25), கேரளாவைச் சேர்ந்த நெவீன் டெல்வின்(24) ஆகியோர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், இது போன்ற பயிற்சி மையங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சீரான தரநிலைகளை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மேலும், அதற்கான தர நிலைகள் அனைத்து பயிற்சி மையங்களிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

டெல்லி மாணவர்கள் மரணம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு விசாரித்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com