இலங்கை: கோவை தொழிலதிபர் 50 ஆண்டுக்கு முன் திருடிய 37.5 ரூபாயை பன்மடங்காக திருப்பிக் கொடுத்தது எப்படி?

Share

பழனியாண்டி, கோவை தொழிலதிபர், இலங்கை
படக்குறிப்பு, கோவை தொழிலதிபர் ரஞ்சித்திடம் இருந்து பழனியாண்டி பணத்தை பெற்றுக் கொண்டார்.

இலங்கையின் மலையகத்தில் 1970களில் தான் திருடிய தொகைக்கு ஈடாக, சுமார் ஐம்பது ஆண்டுகள் கழித்து பன்மடங்கு அதிக பணத்தை திரும்பக் கொடுத்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர். யார் அவர்? என்ன நடந்தது?

50 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது?

இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலிய அருகே அலகொல பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தேயிலை எஸ்டேட்டில் பணியாற்றிய சுப்பிரமணியம் – எழுவாய் தம்பதியினர் தங்களின் குடியிருப்பு பகுதியை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு செல்ல முடிவெடுத்தனர். 1970களின் மத்திய காலம் அது.

வீட்டை காலி செய்யும் போது, வேலைகளை செய்ய உதவியாக பக்கத்து வீட்டில் வசித்து வந்த பதின்வயது சிறுவனான ரஞ்சித்தின் உதவியை அந்த தம்பதியினர் நாடியுள்ளனர்.

பொருட்களை பழைய வீட்டிலிருந்து மாற்றி, புதிய வீட்டில் வைக்கும் வேலை பரபரப்பாக நடந்தது. பொருட்களை மாற்றி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் ரஞ்சித்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com