ஏமன்: ஹூத்தி இலக்குகளை தாக்கிய அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் – என்ன நடந்தது?

Share

ஏமனில் ஹூத்திகள் இலக்குகளை தாக்கிய அமெரிக்கா - என்ன நடந்தது?

பட மூலாதாரம், DVIDS

படக்குறிப்பு, ஏமனில் உள்ள இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி கிளர்ச்சி குழுவின் 15 இலக்குகளை தாக்கியதாக, அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது

ஏமனில் உள்ள இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி கிளர்ச்சிக் குழுவின் 15 இலக்குகளைத் தாக்கியதாக, அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

“கடல்வழிப் பயண சுதந்திரத்தைப் பாதுகாக்கும்” நோக்கில், விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

ஏமன் தலைநகர் சானா உள்பட ஏமனின் முக்கிய நகரங்களில் தாக்குதல்கள் நிகழ்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த நவம்பர் முதல் செங்கடலில் ஹூத்தி குழு சுமார் 100 கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தியது, இதில் இரண்டு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. காஸாவில் நடைபெறும் ராணுவ நடவடிக்கைக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றதாக ஹூத்தி குழு தெரிவித்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com