இலங்கை: அநுர குமார திஸாநாயக்க முன்னிருக்கும் பொருளாதாரச் சவால்கள் என்ன?

Share

இலங்கை பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வெகுவாக உயர்ந்திருக்கின்றன

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவியேற்றிருக்கும் நிலையில், அவருக்கு முன்பாகப் பல சவால்கள் காத்திருக்கின்றன.

புதிய ஜனாதிபதி மீது மக்கள் பெரும் நம்பிக்கையையும், பெரும் எதிர்பார்ப்பையும் வைத்திருக்கும் நிலையில், அவர் முன்பாக இருக்கும் பொருளாதார ரீதியிலான சவால்கள், மிகக் கடுமையானவை.

சிக்கலான பொருளாதார நிலையில் உள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் அநுர குமார திஸாநாயக்கவின் முன்னிருக்கும் பொருளாதார சவால்கள் என்னென்ன? அதனை அவர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்?

2022-ஆம் ஆண்டில் இலங்கை மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேர்ந்தது. அந்நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு வெகுவாகக் குறைந்ததால், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக்கூட இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com